மலேசியாவில் கடந்த 2017ல் 20வது மாடியில் இருந்து நிர்வாண நிலையில் கீழே விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணின் வழக்கை கொலை வழக்காக மாற்றி பொலிசார் மீண்டும் விசாரணையை துவங்கியுள்ளனர்.
நெதர்லாந்தை சேர்ந்த இவானா ஸ்மித் என்ற 18 வயது பெண் சிறுவயதிலேயே மலேசியாவுக்கு குடிபெயர்ந்தார்.
மொடலாக இருந்த இவானாவின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் கடந்த 2017 டிசம்பர் மாதம் மது விருந்து நடந்தது.
அப்போது அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவரும் அவர் மனைவியும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர், மேலும் சிலரும் அங்கிருந்தனர்.
அப்போது அதிகளவு போதையில் இருந்த இவானா அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.
அப்போது திடீரென முழு நிர்வாண கோலத்தில் இவானா 20வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். அங்கிருந்து 6வது மாடியில் வந்து அவரது உடல் விழுந்தது.
இந்த வழக்கை அப்போது விபத்தாக பொலிசார் பதிவு செய்தனர்.
அந்த சமயத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சந்தேகம் படும்படியான விடயங்கள் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவானா மரணம் விபத்து இல்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவர் குடும்பத்தார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் இது குறித்து பொலிசார் விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
எனவே மீண்டும் இதை கொலை என்ற நோக்கில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தற்போது இதை கொலை வழக்காக மாற்றி பொலிசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே இவ்வழக்கில் விசாரிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் புதிதாகவும் பலரிடம் விசாரிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையில் இவானாவுடன் சம்பவத்தின் போது உடனிருந்த தம்பதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.