ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய ‘மனிதர் நேசிக்கும் சுகாதாரமிக்க சுற்றாடலை உருவாக்குவோம்’ எனும் கருப் பொருளில் வவுனியா நகரில் சிரமதான பணியானது முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியா பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இவ் சிரமதான பணியில் வவுனியா நகர வாழ் வர்த்தகர்கள், பொதுமக்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருடன் இணைந்து வர்த்தக சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கமும் முன்னேடுக்கும் இவ் சிரமதான பணியானது நாளை (30) சனிக்கிழமை 8.00 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலைய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.
வருகின்ற திங்கட்கிழமை (02) முதல் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்புறச் சூழலை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு எவ்வித பொதுமன்னிப்புக்களுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ் சிரமதான பணியில் வர்த்தகர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.