நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சுவிற்சர்லாந்து நாட்டில் கூடியது.
நவம்பர் 29,30, டிசெம்பர் 1ம் திகதி ஆகிய மூன்று நாள் அமர்வில், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, தமிழ்நாட்டில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.
தமிழீழத்தை வென்றடைவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை, இந்திய பெருங்கடல் இந்தோ-பசுபிக் புவிசார் அரசியலும் தமிழர்களுக்கான வாய்ப்புக்களும், தமிழீழத் தேசக் கட்டுமானம், தமிழர் தலைவதி தமிழர் கையில் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் ஆகிய தொனிப்பொருட்களை மையப்படுத்தி இந்த அமர்வு இடம்பெறுகின்றது.
தொடக்கநிகழ்வில் சுதந்திரத்துக்கான போராடி வரும் கத்தலோனியாவில் இருந்து அவர்கள் சிறப்பு அதிதியாக Jurdi Vilamova கலந்து கொண்டிருந்தார். சுவிசில் சமூக-அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.
இதேவேளை அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கை, கருத்தாடல், தீர்மானங்கள் என உட்பட பலவிடயங்கள் இவ்மூன்று நாள் அமர்வுகளில் உரையாடப்பட இருக்கின்றன.


