மாவடிப்பள்ளியில்நீர் வெட்டு, தடங்கல்கள் ஏற்படுவதால் மக்கள் நீருக்காக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். நீரை போதியளவு சேமித்து பாவிப்பதற்கு நீர்த்தாங்கி இல்லாத குறைபாட்டினால், நேரடியாக இணைப்பிலிருந்து வரும் நீரை பயன்படுத்துவதனால் நீர்த்தடங்கல்கள் ஏற்படும்.
இப் பிரச்சினைகளை தீர்க்குமுகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் 10 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம், நீர்த்தாங்கிகள் இல்லாத 170 குடும்பங்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டது.
அதற்கமைய செவ்வாய்கிழமை (26), வியாழக்கிழமை (28) 170 குடும்பங்களுக்கான இலவச நீர்த் தாங்கிகள் காரைதீவு பிரதேச செயலக அதிகாரிகளினால், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூலம் வழங்கிவைக்கப்பட்டது.