Loading...
மாவீரன் நெப்போலியனின் சப்பாத்துக்கள் பரிசில் ஏலம் விடப்பட்டுள்ளன. எதிர்பார்கப்பட்ட தொகையை விடவும் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
இந்த ஒரு சோடி சப்பாத்துக்கள் 1815 ஆண்டைச் சேர்ந்ததாகவும், வோட்டர்லூ யுத்தத்தின் போது (Battle of Waterloo) நெப்போலியன் அணிந்திருந்ததாகவும் ஏலம் விடப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. சப்பாத்துக்கள் €50,000 இல் இருந்து €80,000 வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், €117,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையானது.
பிரித்தானியாவின் கடல்கடந்த தீவான St. Helena தீவில் நெப்போலியன் சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் 1821 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததும் அங்கிருந்து இந்த சப்பாத்துக்கள் மீட்கப்பட்டிருந்தன.
Loading...