Loading...
திருகோணமலை மாவட்டத்தின் மஹதிவுல்வெவ கிராமத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு மாணவன் ஒருவன் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த மாணவனின் தந்தை நீண்ட காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்.
Loading...
உயிரிழந்தவரின் மகனான தனஞ்ச என்ற மாணவன் இன்று ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிட்சை எழுதவுள்ள நிலையில், இறந்த தந்தையிடம் மாணவன் இறுதி அஞ்சலியை செலுத்தி விட்டு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற இந்த சம்பவம் பிரதேசத்தையே மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...