சமீபத்தில் நடிகை சோனம் கபூர் நடித்த டோலி கீ டோல் என்ற நகைச்சுவை படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை சோனம் கபூர் ஏமாற்றி திருமணம் செய்து முதலிரவு அன்று மணமகனை தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்து விட்டு நகை பணத்தை கொள்ளையடித்து செல்வார். தற்போது இதே சினிமா போல் உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அலிகார் ஜாவா கிராமத்தில் உள்ள பங்கஜ் என்ற வாலிபருக்கு கடந்த 25 ந்தேதி திருமணம் நடைபெற்றது. 26 ந்தேதிக்கு முதல் இரவு என பெரியோர்கள் முடிவு செய்தார்கள் அதற்கு முன் சடங்குகள் நடத்தப்பட்டது.
இரவு மணமக்கள் இருவரையும் பெரியோர்கள் ஒரு தனி அறைக்கு அனுப்பி வைத்தனர். மறு நாள் காலை வெகு நேரமாகியும் மணமக்கள் சென்ற அறை திறக்கபடவில்லை. பெரியோவர்கள் சென்று அந்த அறைக்கதவை தட்டினர். படுக்கையில் மணமகன் பங்கஜ் மட்டும் படுத்து இருந்தார். அவரை பல முறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. பின்னர் உறவினர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். என்ன விவரம் என்று கேட்ட போது மணமகள் கொடுத்த தண்ணீரை குடித்ததும் தான் உறங்கி விட்டதாக கூறினார்
ஆனால் வீட்டில் இல்லை மணமகள் மாயாமாகி விட்டார். குடும்ப உறுப்பினர்கள் எல்லா இடங்களிலும் தேடினர் ஆனால் அவரை காணவில்லை. புது மணப்பெண் வீட்டில் இருந்த 77 ஆயிரம் பணம் மற்றும் 175 கிராம் தங்க நகைகளையும் கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
உடனடியாக மணமகன் குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். பல் வேறு கனவுகளுடன் முதல் இரவு அறைக்குள் சென்ற மணமகனுக்குதான் பெருத்த ஏமாற்றம். புதுப்பெண் கணவனை தூக்கமாத்திரை கொடுத்து தூங்கவைத்து விட்டு வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளார்.