பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, கவினை காதலித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பின்னர் லாஸ்லியாவின் தந்தை அவர்களை மிரட்டி காதலுக்கு ஒரு இடைவெளி கொடுக்க சொன்னார்.
ஆனால், அதிலிருந்த இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனைக்கண்ட நெட்டிசன்களும் பல கேள்விகளை எழுப்பியும் இருவரும் அமைதிகாத்துகொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள இடத்தில் லாஸ்லியா தனது நண்பர்களுடன் நின்று போட்டோ எடுத்துள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
ஆண் நண்பருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை கண்ட கவின் ஆர்மிகள், ஒரு சர்ச்சையை கிளப்பியது. லாஸ்லியா கவினை பற்று நினைத்து பாருங்கள், அவர் மனது காயப்படும் என பல கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படமும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
— LOSLIYA MARIYANESAN (@losliya_offl) December 2, 2019