திருமணத்தை பொறுத்தவரை அதில் ஜோதிடம் மிகவும் முக்கியப்பங்கை வகிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அடிப்படை குணம் என்று இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அதில் அவர்களின் திருமணத்திற்கான குணங்களும் அடங்கும்.
இந்த குணங்கள் அவர்களின் ராசியில் இருந்து கூட வரலாம். அதற்காக மற்ற ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல.
ஆனால் இந்த ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் முயலுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்க இவர்கள் எந் வீட்டு வேலையையும் செய்வார்கள். இவர்களிடம் இருக்கும் இரக்ககுணம், அன்பு, பிடித்தவர்களுக்காக தியாகம் செய்ய தயாராய் இருக்கும் குணம் போன்றவை இவர்களை சிறந்த கணவராக இருக்க தகுதியுடையவர்களாக மாற்றுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் தங்கள் குடும்பத்தை எப்படியும் காப்பாற்றுவார்கள். இவர்களின் சிறந்த குணமாக இருப்பது நம்பிக்கைதான். சரியான வாழக்கைத்துணை மட்டும் அமைந்து விட்டால் திருமண உறவில் இவர்களை போல நேர்மையான, துணையை மதிக்கக்கூடிய ஆணை பார்ப்பது மிகவும் கடினம். இவர்களிடம் பொறாமையோ, முன்கோபமோ இருக்காது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கணவராக கிடைப்பது வரம். பொதுவாக திருமணம் மற்றும் உறவுகளை குறிக்கும் ராசியாக துலாம் ராசி இருக்கிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காதலையும், வாழ்க்கையும் பகிர்ந்து கொள்ள சரியான துணையை தேடிக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் தங்களின் மனைவியை எப்போதும்
உரிய மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்துவார்கள். துலாம் ராசி ஆண்கள் பொறுமையும், ஆர்வமும் மனைவியை பாராட்டும் குணமும் கொண்டவர்கள். மற்றவர்கள் என்ன கூறினாலும் மனைவியை மகாராணி போல நடத்துவதில் இவர்கள் எப்பொழுதும் சிறந்தவர்கள்.
கடகம்
கடக ராசி ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் சிறந்த கணவர்களில் ஒருவராக இருக்கிறார்கள். மனைவியிடத்தில் பொறுப்பு, ஒழுக்கம், அக்கறை என அனைத்தும் நிறைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். மரியாதை கொடுப்பது என்பது ஆரோக்கியமான உறவிற்கு அடிப்படையானதாகும். இவர்கள் அதனை இழக்கும்போது எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். சரியான மரியாதையும், அன்பும் கொடுத்தால் இவர்கள் தங்கள் மனைவியை கையில் வைத்து தாங்குவார்கள்.
சிம்மம்
எப்பொழுதும் உற்சாகமான சூழ்நிலையை விரும்பும் பெண்ணிற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். அன்பான, நம்பிக்கை மிகுந்த, வசீகரமான இவர்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். சிறந்த கணவராக மட்டுமின்றி சிறந்த குடும்ப தலைவராக இருக்கும் தகுதியும் இவர்களிடம் இருக்கும். இவர்கள் எப்பொழுதும் அனைவரின் கவனமும் தன்னைநோக்கி இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களின் வாழ்க்கைத்துணை அதனை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்து ஓடமாட்டார்கள். பெண்கள் தங்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் நிறைவேற்றும் கணவன் வேண்டுமென்று விரும்பினால் அதற்கு இவர்கள்தான் சிறந்த தேர்வு. தம்பதிகளுக்குள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதனை சரிசெய்ய முதலில் விட்டுக்கொடுப்பது இவர்களாகத்தான் இருக்கும். மனைவியின் சின்ன சின்ன செயல்களுக்கு கூட அவர்களை அதிகம் பாராட்டுவார்கள். பெண்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க இதைவிட வேறு என்ன வேண்டும். காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள்.