வவுனியாவில் நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் இன்று (06) அதிகாலை 2.00 மணி தொடக்கம் காலை 10.00 மணிவரையிலான காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
வவுனியா வேப்பங்குளம், நெளுக்குளம், புளியங்குளம், போகஸ்வேவ, பூவரசங்குளம், செட்டிக்குளம் போன்ற பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது. கா.பொ.த சாதாரண தர மாணவர்களின் பரீட்சை நடைபெற்று வருவதினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இவ் விடயம் தொடர்பாக மின்சார சபையின் வடமாகாண தலைமைக் காரியலாயத்தினை தொடர்பு கொண்டு வினவிய போது ,
வவுனியாவில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மின்தடங்கல் ஏற்படுவதாகவும் அதனை எமது ஊழியர்கள் விரைந்து நிவர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அதிகாலையில் எழுந்து பரீட்சைக்கான முன் ஆயத்தங்களை மண்ணெண்ணெய் விளக்கில் தொடர்ந்தமை எமது கமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.