புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடத்தி, கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி விசாரணைக்குட்படுத்த உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (6) மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்பாக விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18 வயதுடைய சிவலோகநாதன் வித்தியாவை கடத்தி, கூட்டு வலிலுறவிற்குள்ளாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்தினால் மே 13, 2015 அன்று 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தங்களது தண்டனையை குறைக்கக் கோரி அவர்கள் ஏழு பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இனி ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்பாக விசாரிக்கப்பட உள்ளது.