அமெரிக்காவில் 5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவனை அடித்து கொன்ற வழக்கில் தாய் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
Illinois-ஐ சேர்ந்தவர் ஆண்ட்ரூ ப்ரூயண்ட். இவர் மனைவி ஜோயன் குன்னிங்கம். இவர்களின் ஐந்து வயது மகன் ஏஜே ப்ரூயண்ட்.
கடந்த ஏப்ரல் மாதம் சிறுவன் ஏஜே, வீட்டில் உள்ள படுக்கையில் உட்கார்ந்திருந்த போது உடையுடன் அப்படியே சிறுநீர் கழித்துள்ளான்.
இதை பார்த்த ஜோயனுக்கு ஆத்திரம் வந்த நிலையில் ஏஜேவை சரமாரியாக அடித்துள்ளார், அவருடன் சேர்ந்து ஆண்ட்ருவும் அடித்தார்.
ஒரு கட்டத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் ஏஜே உயிரிழந்தான். இதையடுத்து அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஏஜேவை இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.
பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜோயன் மீதான குற்றச்சாட்டு தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டுகளில் இருந்து 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர் கூறியுள்ளனர்.
அடுத்த மாதம் ஜோயனுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
அதே சமயத்தில் ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.