Loading...
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அவசர உலகில் அனேகமானவர்கள் ஒன்லைன் மூலமாகவே தமது பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
இவர்களுக்கு மேலும் உதவும் வகையில் கூகுள் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
அதாவது தாம் சொப்பிங் செய்யவேண்டிய பொருட்களை கூகுளில் தேடும்போது அப் பொருட்கள் எத்தனை நாட்களில் டெலிவரி செய்யப்படும் எனும் விபரத்தை கூகுள் தேடலிலேயே காண்பிக்கவுள்ளது.
Loading...
இதற்காக ஒன்லைன் வியாபார நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் நிறுவனம் தற்போது பணியாற்றிவருகின்றது.
பயனர்கள் நேரடியாக ஒன்லைன் வியாபார இணையத்தளங்களுக்கு செல்வதை விடவும் கூகுளிலேயே அதிகமாக தாம் கொள்வனவு செய்ய விரும்பும் பொருட்களை தேடுகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டே இவ் வசதியினை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...