புதிய அரசாங்கம் உத்தரவின் பேரில் வற் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேச நிர்மாண வரியை நீக்கியுள்ளதன் சலுகையை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த வரிச் சலுகை காரணமாக பேக்கரி உரிமையாளர்களுக்குக் கூடுதலான நன்மை கிடைத்திருப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்தார்.
இவ் வரிச்சலுகை காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 50 ரூபாவால் குறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பல வரிகள் குறைக்கப்பட்ட நிலையில் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை. நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவாக பாண் காணப்படுகிறது. விலை குறைப்பினால் நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.