எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட தயாராகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அந்த கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னம் அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டணி அமைக்க வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.
எனினும், இந்த யோசனைக்கு சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் இரண்டு தலைவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமது மாவட்டங்களில் மூன்றாவது கட்சியாக போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் ஆசனங்களை கைப்பற்றுவது சிரமம் என்பதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.