2016ம் ஆண்டு நிறைவடைவதற்கு சில வாரங்களே உள்ளன. அதனால் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க இது சரியான தருணமே.
கடந்த வருடத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக காலநிலை ஏஜன்சி மிகவும் பாரதூரமான விடயமொன்றைப் பற்றிக் கூறியுள்ளது.
1880ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சூழல் வெப்பமடைதல் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது என்பதே அவ்விடயம்.
உலக காலநிலை தொடர்பாக அவதானத்துடன் செயல்படும் நிபுணர்கள் 2015ம் ஆண்டு இறுதியில் 2015ம் ஆண்டே அதிக வெப்பமடைந்த ஆண்டெனக் குறிப்பிட்டார்கள்.
2016ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னரேயே 2016ம் ஆண்டை வெப்பம் அதிகரித்த ஆண்டாகக் குறிப்பிடுகின்றார்கள்.
இதிலிருந்து வருடா வருடம் உலகம் வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்பது தெரிகின்றது.
கடந்த கைத்தொழில் யுகத்தோடு வெப்பநிலை உயர்வை ஒப்பிடும்போது இவ்வருடம் 1.2 பாகையினால் வெப்பம் அதிகரித்துள்ளது.
இவ்வருடம் உலகின் பல நாடுகளில் காணப்பட்ட எல்நினோ காலநிலை நிலைமைக்கு உலக வெப்ப அதிகரிப்பே காரணமென நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
உலக காலநிலை ஏஜன்சியின் பொதுச் செயலாளர் பெடரி தாலஸ் இந்நிலைமையை பின்வருமாறு விபரிக்கின்றார்.
எல்நினோ நிலைமை காரணமாக உண்டாகிய அதிக வெப்பம் தற்போது குறைந்துள்ளது. ஆனால் உலகம் வெப்பமடைதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக மோசமான சம்பவங்களும் மற்றும் பாதிப்புகளும் உண்டாகின்றன.
சில சந்தர்ப்பங்களில் அசாதாரண முறையில் வெப்பமான காலநிலையும் வேறு சில சந்தர்ப்பங்களில் வெள்ள நிலைமையும் அதனாலேயே ஏற்படுகின்றது.
பொதுச் செயலாளர் பெடரி தாலஸின் கூற்றை எமக்கு ஞாபகப்படுத்தும் அசாதாரண காலநிலை பாதிப்புகள் சில உண்டு.
அண்மையில் வீசிய மெதில் சூறாவளி. மெதில் சூறாவளியால் ஹைட்டி இராச்சியமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தார்கள்.
அதேபோல் சீனாவும் மோசமான காலநிலையால் பாதிப்புக்குள்ளாகும் நாடாகும். அந்நாட்டின் யெல்சி நதிதீரத்தில் மிகவும் மோசமான வெள்ளம் ஏற்பட்டது.
1999ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் 310க்கும் அதிகமானோர் பலியாகினர். வெள்ளத்தால் 14 பில்லியன் அமெரிக்க டொலர் பொருட் சேதம் ஏற்பட்டது.
அல்ஜஸீரா செய்திக் சேவையும் இவ்வருடம் மே மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளநிலைமைப் பற்றிய விபரங்களை வெளியிட்டிருந்தது.
உலகில் வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளைப் பற்றி நாம் அறியாவிட்டாலும் எமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பற்றி நாம் நன்கறிவோம்.
உலகில் வெப்ப அதிகரிப்பு ஒரே சீராக அமைவதில்லை. உலகில் பல்வேறு பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிப்புத் தொடர்பாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக தரவுகளைப் பெற்று வருகின்றார்கள்.
மிக உயர்ந்த மட்டத்தில் வெப்ப அதிகரிப்பு ஆர்டிக், ரஷ்ய பிரதேசங்களில் காணப்படுவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
வெப்ப அதிகரிப்பின் வீதம் 6 பாகைத் தொடக்கம் 7 பாகையாக உள்ளதாக கூறுகின்றார்கள்.வடக்கு ரஷ்யா, அலஸ்கா, வட மேற்கு கனடா ஆகிய பிரதேசங்களில் நீண்டகாலமாக சாதாரண வெப்பநிலை அதிகரிப்பு 3 பாகையாகும்.
பெரும் பிரதேசங்களான ஆர்ஜெண்டினா, பெரகுவே, பொலிவியா மற்றும் தென் அமெரிக்காவில் சாதாரண வெப்ப அதிகரிப்பு குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
வெப்ப அதிகரிப்பு நிலத்தில் மாத்திரமல்ல கடலிலும் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை வட்டமும் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது.
விசேடமாக பவளப் பாறைகளின் நிறமாற்றம், உவர்நீர் சூழல் தொகுதியில் ஏற்படும் பாதிப்பு என்பவற்றைக் கூறலாம்.
இதை நாம் அவுஸ்திரேலியாவின் பவளப் பாறைகளைப் பற்றி ஆராயந்தால் புரிந்து கொள்ளலாம்.
அங்கு பவளப் பாறைகளில் சுமார் அரைவாசியான பவளங்கள் இறக்கும் நிலைமையிலுள்ளன.உலகம் வெப்பமாவதால் கடல்நீரின் மட்டமும் அதிகரிக்கின்றது.
2014 – 2016 வரையான காலப்பகுதியில் கடல் நீர் மட்டம் 15 மில்லி மீற்றராக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளார்கள்.
அதன்படி வருடத்திற்கு 3 தொடக்கம் 3.5 மில்லிமீற்றர் அளவில் கடல் மட்டம் உயர்வடைகின்றது. இந்நிலைமைக்கு வெப்பம் அதிகரிப்பதால் பனிக் கட்டிகள் உருகுவதே காரணமாகும்.
கடல்நீர் மட்ட உயர்வு மனித வாழ்க்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் காரணியாகும்.எப்படியானாலும் நாம் இவை அனைத்துக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம்.
மிகவும் மோசமான விடயம் என்னவென்றால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் நிலைமை பற்றி அறிந்திருந்தும் அதற்காக நாம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
வேறு விதமாகக் கூறினால் பூமி வெப்பமடைதல் என்னும் விடயத்தை குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து நீண்ட விளக்கம் அளிப்பதற்கு மாத்திரம் எல்லைப்படுத்தியுள்ளோம்.