சுவிட்சர்லாந்தில் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் தொடர்பில் குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிப்பதாக பாதிக்கப்பட்ட தாயார் கண்கலங்கியுள்ளார்.
சூரிச் மண்டலத்தில் கலை காட்சி கூட உரிமையாளர் ஒருவர் உடன் பணியாற்றும் 23 வயது ஊழியரை கடந்த 2014 டிசம்பர் மாதம் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பொலிசாரால் மீட்கப்பட்ட அந்த சடலமானது முகம் உள்ளிட்ட பாகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
மேலும், குறித்த இளைஞரின் வாய்க்குள் திணிக்கப்பட்ட நிலையில் மெழுகுவர்த்தியும் இருந்துள்ளது. மட்டுமின்றி கழுத்தை நெரித்து கொன்றுள்ளது உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த்து.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிமன்றம் குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு குறித்த கலை காட்சி கூட உரிமையாளருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால் சமூகத்தில் செல்வாக்கு மிக்க அந்த குடும்பமானது பிரபல சட்டத்தரணிகளை அமர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நவம்பர் மாதம் வெளியான தீர்ப்பில், குற்றவாளிக்கு வழங்கப்பட்டிருந்த 12.5 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, வெறும் மூன்று ஆண்டுகள் மட்டும் தண்டனை வழங்கியது.
ஏற்கெனவே அவர் மூன்றாண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், தற்போது நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள சிகிச்சையில் மட்டும் இருந்து வருகிறார்.
போதை மருந்தின் தாக்கத்தாலையே அந்த கொலை நடந்துள்ளதாக சாதித்த கலை காட்சி கூட உரிமையாளரின் சட்டத்தரணிகள், அதற்கான தண்டனையை பெற்றுத் தந்துள்ளனர்.
போதை மருந்து தாக்கத்தால் ஏற்படும் குற்றச்செயல்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு உண்மையில் அதிர்ச்சியையும் கடும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக 23 வயது மகனை பறிக்கொடுத்த தாயார் கதறியுள்ளார்.
எனது மகனின் உயிர் நீதிமன்றத்திற்கு பொருட்டாகவே தெரியவில்லையா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
எனது மகனின் சடலத்தையே பார்க்க அனுமதிக்கவில்லை. இதில் இருந்தே எத்தனை கொடூரமாக எனது மகன் கொல்லப்பட்டுள்ளான் என தெரிவிகிறது என அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சட்டத்தால் என்ன பயன் என வினவியுள்ள அவர், பொதுமக்கள் ஒன்று திரண்டு கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.