வைத்திய அறிக்கையில் எழுதப்பட்ட மருந்துக்கு மேலதிகமாக அதிகரித்த மருந்தை வழங்கியதால் காங்கேயனோடை மாணவி கவலைக்கிடம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயாளர் பிரிவில் காங்கேயனோடையைச் சேர்ந்த 14 வயதுடைய 9ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியொருவர் புற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகி கடந்த ஒருவருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையின் பலனாக மாணவி தேறி வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயாளர் பிரிவில் அனமதிக்கப்பட்டிருந்தார்.
அன்று மாணவியை பார்வையிட்ட புற்று நோய் பெண் வைத்திய நிபுணர் 2.0 மில்லி மருந்தை வழங்குமாறு மாணவியின் வைத்திய அறிக்கையில் எழுதியுள்ளார்.
ஆனால் மருந்தை ஏற்றிய தாதி 2.0 (2தசம்0) என்பதற்கு மேலதிகமாக 20 மில்லி மருந்தை ஏற்றியுள்ளார்.
மருந்தை ஏற்றுவதற்கு முன்னர் குறித்த மாணவி மிஸ் 2.0 மருந்து தானே ஏற்றுவது வழமைக்கு மாறாக கூடுதலாக ஏற்றுகின்றீர்கள் என தாதியின் கையைப் பிடித்து கேட்க தாதி வைத்தியர் எழுதியதைத்தான் நான் ஏற்றுகின்றேன் என கூறி வலுக்கட்டாயமாக மருந்தை மாணவிக்கு ஏற்றியுள்ளார்.
இதையடுத்து சில நிமிடங்களில் மயக்க மடைந்த மாணவி உயிருக்கு போராடுகின்றாள் என்று தெரியவே தடுமாறிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயாளர் பிரிவு வைத்தியர் மற்றும் தாதியர்கள் மாணவியை கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு இரத்த மாற்று சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனியிடம் சற்று முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை விணவினேன்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணையை தாம் மேற் கொண்டு வருவதாகவும் கொழும்புக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழமையாக மருந்து ஏற்றுவது தொடர்பில் வைத்திய நிபுணர் அறிக்கையில் மருந்தின் அளவை பதிவு செய்வார். பின்னர் விடுதி வைத்தியர் அதை பரீசிலிப்பார் அதன் பின்னர் அந்த மருந்தை எடுப்பதற்காக மருத்தகத்திற்கு கொண்டு செல்லப்படும் அங்கு மருந்து வழங்குனர் பரீலித்த பின்னர் அதை அனுப்புவார். அதன் பின்னரும் தாதியர்கள் விடுதி வைத்தியர் பரிசீலனை செய்த பின்னர் மருந்து ஏற்றப்படும்
இந்த நடை முறைகளையெல்லாம் தாண்டி ஏன் இந்த மாணவிக்கு இவ்வாறான அதிகரித்த மருந்து வழங்கப்பட்டது என்பது தான் கேள்வியாகும்.
பொறுப்பற்ற விதத்தில் நடந்துள்ளனரா என்றே கேள்வியையே இங்கு கேட்க வேண்டியுள்ளது.
குறித்த மாணவியின் வீடும் முழு காங்கேயனோடையும் பெரும் சோகத்தில் உள்ளது. குறித்த மாணவியின் குடும்பம் வறுமையான குடும்பமாகும்
மாணவியின் வீட்டில் மக்கள் வெள்ளமாக உள்ளது. அங்;கு செல்வோர்கள் எல்லோரும் கண்ணீர் மல்கியே வெளியேறுகின்றனர்.
குறித்த மாணவி கல்வியில் அதிக ஆர்வம் காட்டிவருவதுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற இறுதி தவணைப் பரீட்சையிலும் சிறந்த பெறுப்பேற்;றையும் பெற்;றுள்ளார்.
தற்போது இந்த மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.