யாழ் துன்னாலையில் இரண்டரை வயது பாலகன் நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் குறித்த பாலகன் உறங்கியுள்ள நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லை என தாயார் பொலிஸ்நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இன்று காலை பாலகனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தையையும் தாயாரும் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் தடுத்துவைத்துள்ளனர்.
மேலும் பாலகனின் உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என தெரிவித்த நெல்லியடிப் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.