தென் ஆப்பிரிக்காவில் நடந்த கால்பந்து போட்டியில் கோல் கீப்பர் ஒருவர் கடைசி நிமிடத்த்ல் எதிரணி பகுதிக்கு சென்று அசத்தலாக சிசர் கட் மூலம் கோல் அடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த கால்பந்து லீக் போட்டியில் ஓர்லெண்டோ பிராட்டஸ் அணியும், பரோகா எப்.சி அணியும் மோதின.
ஆட்ட நேர முடிவில் பிராட்டஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், போட்டி முடிய கூடுதலாக 5 நிமிடம் கொடுக்கபட்டது.
இதை தொடர்ந்து, கோல் அடித்து போட்டியை சமன் செய்ய பரோகா அணி வீரர்கள் முயற்சித்தனர். இந்நிலையில், கோலடிக்கும் ஆர்வத்தில் அந்த அணியின் கோல் கீப்பர் ஒஸ்கரின் மசுலுகே எதிரணியின் பகுதிக்கே வந்து விட்டார்.
அப்போது அந்த அணிக்கு சாதகமாக ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் வாய்ப்பில் வந்த பந்தை சிசர் கட் அடித்து ஒஸ்கரின் கோலடித்தார். இது 96 ஆவது நிமிடத்தில் அடிக்கபட்ட கோலாகும். இதனை அந்த அணி வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதன் மூலம் போட்டி 1-1 என சமனில் முடிவடைந்தது. ஒஸ்ரின் கோலை கண்ட அந்த அணியின் பயிற்சியாளர் மகிழ்ச்சியில் திகைத்தார்.