முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் , உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும்.
ஒரு நாளைக்கு , ஒன்றில் இருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது,
உதாரணத்துக்கு ,தூசியோ, நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள், நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது , சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.
அதாவது ,இந்த மாதிரி தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள்(Mast cells ), ஹிஸ்டமைன்(Histamine ) என்ற வேதி பொருளை, வெளிப்படுத்துகின்றன.
இந்த ஹிஸ்டமைன் ஆனது , உடனே தும்மல் , அரிப்பு , மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்றதொரு உணர்வு , போன்றவற்றை தூண்டி விடுகிறது.
இவ்வாறு தூண்டப்பட்டவுடன் சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட ஆரம்பிக்கின்றன.
சளிப்பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கை முறையில் மருத்துவத்தினை பின்பற்றுவது நல்லது.
சளியை விரட்டுவதற்கான தீர்வை பார்க்கலாம்.
- முதலில் மூன்று எழுமிச்சையை எடுத்துக் கொண்டு பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- பின்பு, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தன்ணீர் எடுத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- இப்பொழுது, இரண்டு கப் நீர் ஒரு கப் அளவிற்கு சுண்ட கொதிக்க வைத்தவுடன் வெட்டி வைத்துள்ள எழுமிச்சையை அதில் நன்றாக பிழிந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இதனை, இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு மிதமான சூட்டுடன் குடித்து விட்டு தூங்கினால் உடம்பில் உள்ள சளி எல்லாம் வியர்வையாக வெளியேறி விடும்.
- இதனை பின்பற்றினால் மருத்துவரை காண வேண்டிய அவசியமே இருக்காது.