ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி – சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதையடுத்து 1 – 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 35 ஆம் நாள் ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் ஜேஆர்டி டாடா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்திள் 26 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 34 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஷைகானிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
35 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்தது. இதில் சென்னையின் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது. 49 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிவெல்ரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
62 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் 71, 78 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் சென்னை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஆட்டத்தில் 89 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஐசக் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், ஜாம்ஷெட்பூர் அணி போராடி போட்டியை சமநிலைக்கு எடுத்து வந்தது. 90 ஆவது நிமிடத்தில் சென்னையின் கோயனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் எஃப்சி – சென்னையின் எஃப்சி அணிகள் 1 – 1 என் கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. சென்னை அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில், கடைசி நிமிடங்களில் ஜாம்ஷெட்பூர் அணியை கோல் அடிக்க விட்டு டிரா மட்டுமே செய்தது.