வைத்தியர் சாபி ஷிஹாப்தீனால் கருத்தடை செய்யப்பட்ட தாய்மார்களுக்கு நீதி கிடைக்கவில்லை என குருநாகலை மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சரத் வீரபண்டார தெரிவித்துள்ளார்.
குருநாகலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
வைத்தியர் சாபி ஷிஹாப்தீனால் கருத்தடை செய்யப்பட்ட தாய்மார்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில் அத்தாய்மார்கள் சார்பில் நானும் சக மருத்துவமனை ஊழியர்களும் நாட்டிற்கு வெளிப்படுத்தத் தயாராக இருக்கின்றோம்.
கடந்த அரசாங்கத்தில் பல்வேறு அடக்குமுறை இருந்தன. மருத்துவர் சாபியினால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குறித்த மருத்துவரை விடுதலை செய்யவதற்காகவே விசாரணைகள் நடத்தப்பட்டன.
தங்களுக்கு என்ன பாதிப்புக்கள் ஏற்பட்டன என்பது தொடர்பில் அந்த தாய் மார்களுக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.