சர்ச்சைக்குள்ளாகி இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ளும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை தற்காலிகமாக பணியிலிருந்து விலகுமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் சுவிஸ் தூதரகப் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒரு நாடகமாகும் என்று இலங்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் அதிகாரியை தற்காலிகமாக பணியிலிருந்து விலகுமாறு சுவிஸ் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஆலோசனையின் அடிப்படையில் குறித்த பெண் அதிகாரியை பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் அப்பெண் அதிகாரி கடந்த மூன்று நாட்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்.
இந்நிலையில் அவர் சில தகவல்களை வழங்குவதற்கு முன்வந்திருப்பதுடன் வருத்தம் தெரிவித்திருந்ததாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.