கனடாவில் ராணுவத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது குறித்து அவர் வளர்ப்பு மகன் உருக்கமாக பேசியுள்ளார்.
Albertaவை சேர்ந்தவர் கென் சான் (62). இவர் 25 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் உச்சக்கட்ட மனஅழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரின் வளர்ப்பு மகன் ஹரால்ட் லிண்டர் கூறுகையில், மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கென் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது உயிரை தானே மாய்த்து கொண்டார்.
அவர் இறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு இமெயில் ஒன்றை அனுப்பினார்.
அதில், என் மரணத்தின் மூலம் கருணைக்கொலை என்ற விடயம் கவனம் பெறும் என நினைக்கிறேன் என குறிப்பிட்டதாகவும், கனடா அரசை இது தொடர்பில் அவர் குற்றஞ்சாட்டியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனிடையில் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டைலர் ஷன்ரோ, கென் மரணம் குறித்து கூறுகையில், எந்தவொரு கனேடியரும் தங்கள் உயிரைப் மாய்த்து கொள்வது என்பது ஒரு கொடூரமான நிகழ்வு என்று நினைக்கிறேன்,
இது அவர்களின் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினரை வெளிப்படையாக பாதிக்கிறது. கென் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
மனநலப்பிரச்சனை மற்றும் மன அழுத்த பிரச்சனை தொடர்பில் அனைத்து சிகிச்சைகளுக்கும் மாகாண அரசு முதலீட்டை தொடர்ந்து அதிகமாக அளிக்கும் என கூறியுள்ளார்.