Loading...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
சமகாலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தலைவர் ஜப்ரி வென் ஓடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Loading...
நாட்டின் சகல மக்களினதும் ஜனாதிபதியாக செயற்படப் போவதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இதனை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது.
அனைத்து தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் தேவைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஒன்றியத்தின் தலைவர் ஜப்ரி வென் ஓடன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...