பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது. ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்பு, குரோமோசோம் மாறுபாடு, பால்வினைநோய்கள், மனவலிமை மாறுபாடுகள், புகைப்பிடித்தல், மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாதல், இறுக்காமான உள்ளாடை ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளது.
இதற்கான இறக்கை முறை தீர்வு
- தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் தேன்கலந்து சாப்பிடலாம்.
- துவளைப்பூ முருங்கைப்பூ இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
- பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
- முள்முருங்கை இலையை நெய் அரிசி மாவு சேர்த்து வேக வைத்து சாப்பிடலாம்.
- நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
- நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.
- சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
சேர்க்க வேண்டியவை
வெந்தயம், உளுந்து, ஜவ்வரிசி, கோதுமை, கொத்தமல்லி கீரை, அரைக்கீரை, பசலை, எலுமிச்சம்பழம், புடலங்காய், பலாக்காய், மாம்பழம், மாதுளம்பழம், முருங்ககாய் பிஞ்சு, பிஸ்தா, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு.
தவிர்க்க வேண்டியவை
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள் முதலியவைகளை தவிர்த்தல் நல்லது.