சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து சனிக்கிழமை இரவு வெடித்துச் சிதறிய மர்ம பொருளால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிந்த சம்பவம் தொடர்பில் படுகாயமடைந்த 16 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
லூசெர்ன் மண்டலத்தில் Wolhusen பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே குறித்த மர்ம பொருள் வெடித்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மண்டல பொலிசார் துரிதமாக செயல்பட்டு, அந்த குடியிருப்பில் இருந்த எஞ்சியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
மர்ம பொருள் வெடித்ததில் அந்த குடியிருப்பு சேதமடையவோ, தீ பற்றவோ இல்லை எனவும், பாதுகாப்பு கருதியே அங்குள்ள மக்களை வெளியேற்றியதாகவும் லூசெர்ன் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், வீட்டு சோதனையின்போது பட்டாசு தொடர்பான பொருள்கள், வடிவமைக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அறியப்படாத பொருட்கள் என பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
சனிக்கிழமை இரவு வெடித்துச் சிதறிய பொருள் தொடர்பில் விசாரணை நடைபெற உள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் மண்டல பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.