எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துமாறு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மீளமைப்புக் குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, மலிக் சமரவிக்ரம, வஜிர அபேவர்த்தன, ரஞ்சித் மத்தும பண்டார, ஆஷூ மாரசிங்க, தலதா அத்துகோரள ஆகியோரைக் கொண்ட மீளமைப்புக் குழுவே, இந்தப் பரிந்துரையை முன் வைத்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து ஆராய்வதற்காக, கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை, எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் கூட்டுமாறு கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க, ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.