Loading...
அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி, சஷி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த வழக்கு விசாரணைகளை அடுத்த ஆண்டு மார்ச் 2ம் திகதி வரை ஒத்திவைத்து, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.
போலியான தகவல்களை முன்வைத்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்று கொண்டதாக, சஷி வீரவன்சவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Loading...
சட்டவிரோதமாக இராஜதந்திர மற்றும் பொது கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சஷி வீரவன்ச 2015 பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தற்போது பிணையில் வெளியே வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...