சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளதாக சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர பெண் பணியாளர் ஒருவர் தவறான தகவலை வெளியிட்டதாக தெரிவித்து, இன்று கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த மாதம் 25ம் திகதி கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர பெண் பணியாளர் ஒருவர் கடத்திசெல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சுவிஸ் தூதரகம் இருவரும் இந்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்தனர்.
அத்துடன், உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதும் குறித்த பெண் பணியாளர், மூன்று நாட்களுக்கு மேலாக 30 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும் இந்த அறிக்கையூடாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுவிஸ் தூதர பணியாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்க வேண்டும் எனவும் வலியுத்தப்பட்டுள்ளது.
மேலும், பணியாளரின் உரிமைகள் சிறப்பாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் FDFA எதிர்பார்க்கிறது.
Swiss Federal Department of Foreign Affairs (@SwissMFA) criticises lack of due process in case against #lka Swiss embassy employee. Calls for better protection of personal rights and compliance w/ national law and international standards. pic.twitter.com/31fNa1a3ov
— Roel Raymond (@kataclysmichaos) December 16, 2019
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.