Loading...
வெந்தயம் அனைவரின் வீட்டு சமையல் அறையிலும் இருக்க கூடிய ஒரு பொருள். இதை சமையல் பொருளாக மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும் பயன்படுத்துவார்கள்.
இது உடலுக்கு குளிர்ச்சியை தரக் ஒன்றாக இருப்பதால், உடல் உஷ்ணத்தை குறைக்க இதை எடுத்து கொள்வார்கள்.
Loading...
இது சர்க்கரை நோய் முதல் அதிக கொழுப்பு வரை அனைத்திற்கும் இயற்கை தீர்வாக செயல்படும் ஆற்றல் கொண்டது.
தினமும் உணவில் வெந்தயத்தை சேர்த்து வருவதன் மூலம் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முழுமையாக தெரிந்து கொண்டு இனி தினமும் சாப்பிடுங்கள்.
- தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் நிறைய பேருக்கு உள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை வெந்தயம் போக்கும்.
- வெந்தயத்தில் உள்ள உட்பொருட்கள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
- இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டெராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இவை தான் கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.
- தினமும் வெந்தயத்தை சமையலில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
- வெந்தயம் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுவிக்கும்.
- உடல் எடையால் கஷ்டப்பட்டு வருபவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்ததும் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.
- இதனால் உங்கள் பசி கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது குறையும்.
- பெண்கள் வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து விடுபடலாம்.
- எனவே உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, தசைப் பிடிப்புகள் போன்றவை அதிகம் இருந்தால், இந்த வழியை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
- வெந்தயத்தினை உணவில் மட்டும் அல்ல டீ போட்டு கூட தினமும் பருகலாம்.
வெந்தய டீ தயாரிப்பது எப்படி?
- ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.
Loading...