பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டதாக பரபரப்பு தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்நிலையில், நான் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட தகவல் வதந்தி என்று இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பல்லவியே கூறியுள்ளார்.
நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
https://www.instagram.com/tv/B6I2EyeAd6n/?utm_source=ig_web_options_share_sheet
நான் நலமாக இருக்கிறேன், போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். குறித்த காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
அவருக்கும், அவரது சகோதரிக்கும் நேற்றிரவு சண்டை நடந்ததால் பல்லவி கோபமாக காரை எடுத்து சென்றுவிட்டார்.இன்னும் வீடு திரும்பவில்லை. கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இது குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை, குப்புசாமியின் மகள் பல்லவி நலமாக இருப்பதாக வெளியான தகவலின் பின்னர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.