பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் தன் உடலை முறுக்கேற்ற நிச்சயம் ஊக்க மருந்து தான் சாப்பிட்டிருக்க வேண்டும் என பிரபல உடற்பயிற்சியாளர் ரன்வீர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர்கான் தற்போது டங்கல் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமானது இன்னும் சில நாட்களில் உலகெங்கிலும் திரைக்கு வரவிருக்கிறது.
டங்கல் திரைப்படத்தில் அமீர்கான் 51 வயதான ஊளைச்சதை உடலமைப்பை கொண்ட ஒரு கதாபாத்திரம் மற்றும் சிக்ஸ் பேக் எனப்படும் உடல் முறுக்கேறிய இளைஞன் கதாபாத்திரம் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.
இப்போது அவர் முறுகேறிய உடலமைப்பை பெற்றது குறித்து தான் சர்ச்சை எழுந்துள்ளது.
இது சம்மந்தமாக பிரபல உடற்பயிற்சியாளர் ரன்வீர் அலாபாடியா கூறுகையில், வெறும் ஆறே மாதத்தில் அமீர்கான் ஊளைச்சதை உடம்பிலிருந்து இப்படி முறுக்கேறியது என்பது இயற்கையாக சாத்தியமில்லை, நிச்சயம் அவர் ஊக்கமருந்து ஏதேனும் உட்கொண்டிருக்க வேண்டும்.
தடகள விளையாட்டு வீரர்கள் எல்லாம் 35 வயதுக்கு மேலே ஓய்வு பெற காரணமே அவர்கள் உடல் பலவீனமடைய தொடங்குவதால் தான். அப்படி பலவீனமாவதால் அவர்களால் முழு சிறப்பாக செயல்ப்பட முடியாது.
ஆனாலும் அமீர்கானை குறை கூற முடியாது, அவர் ஒரு நடிகர் . மக்களை மகிழ்விப்பது தான் அவர் பணி அதற்காக அவர் இப்படி செய்திருக்கலாம் என கூறிய ரன்வீர், நான் அமீர்கானை மட்டும் இப்படி சொல்லவில்லை பல நடிகர்களும் இப்படி உடலை முறுக்கேற்ற ஊக்கமருந்தை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.