மனிதன் பேசுவதற்கும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதற்கும் வாயில் உள்ளே உள்ள நாக்கு தான் உதவுகிறது.
மேலும் உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும்.
இப்படிப்பட்ட நாக்கானது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அதன் தன்மையை வைத்தே ஒருவரின் ஆளுமைதிறன் மற்றும் குணாதிசயம் பற்றி கூற முடியும் தெரியுமா?
தடித்த நாக்கு
தடித்த நாக்கு உள்ளவர்கள் எதர்கெடுத்தாலும் அதிகளவில் கோபப்படகூடியவர்களாக இருப்பார்கள்.
எல்லா விடயங்களுக்கும் விதண்டா வாதம் செய்யும் குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்களின் ராஜ்ஜியம் தான் இவர்கள் வீட்டில் நடக்கும்.
மெல்லிசான நாக்கு
இப்படியான நாக்கு உடையவர்கள் அதிகம் பேசுபவர்களாக இருந்தாலும் வெள்ளை மனதுகாரர்களாகவே இருப்பார்கள். மனதில் பட்டதை பேசும் திறன் இவர்களின் மிக பெரிய பலமாகும்.
நீளமான நாக்கு
நீளமான நாக்கை கொண்டவர்கள் எல்லா விடயத்திலும் விவேகமாக செயல்படுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவர்கள் மீது மிகுந்த காதலும், அன்பும் கொண்டிருப்பார்கள்.
சிறிய நாக்கு
இப்படியான நாக்கு உள்ளவர்கள் மிக அமைதியான சுபாவம் கொண்டவர்களாகவும், குறைவாக மற்றவர்களிடம் பேசுபர்களாகவும் இருப்பார்கள். இதனால் யாரையும் அவ்வளவு எளிதாக எதற்கும் இவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
காற்றியக்கவியல் வடிவில் (Aerodynamic) நாக்கு
இவர்கள் இயற்க்கையிலேயே புத்திசாலிகளாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் யாரையும் எந்தவொரு விடயத்துக்காகவும் எதிர்க்க தயங்க மாட்டார்கள்.
வெள்ளை நிறம் படிந்த நாக்கு
இவர்கள் காதல் விடயத்தில் அதிக முனைப்பு காட்டுவார்கள். இப்படியான நாக்கு உள்ள பெண்கள் தங்கள் கணவர்கள் மேல் மிகுந்த அன்பும், காதலும் வைத்திருப்பார்கள்.
சிவப்பான நாக்கு
இவர்களுக்கு நெருப்பை காண்டாலே அலர்ஜி தான். இதில் ஒவ்வொருவரும் ஒரு விதமாக இருந்தாலும் பொதுவாக இப்படியான நாக்கை உடையவர்கள் பயந்த சுபாவமாகவே இருப்பார்கள்.