இது வரையில் பல தடவைகள் பூமி அழிந்து போகும் என பல்வேறு வகையான கருத்துகள் கூறப்பட்டது. 2012ஆம் ஆண்டும் இதே போன்றதொரு கதை பூதாகரமாக வெடித்தது.
ஆனாலும் மறுநாள் நல்ல பொழுதாகவே விடிந்தது முதல் உலக அழிவு தொடர்பில் பெரிதாக யாரும் நம்பிக்கை வைப்பதில்லை.
எனினும் மீண்டும் ஓர் தடவை அதே போன்றதொரு அச்சம் மேற்குலகத்தை தொற்றிக் கொண்டுள்ளது. இப்போது உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு அமைய மீண்டும் உலக முடிவு அச்சம் வலுவடைந்துள்ளது.
இருண்ட கிரகம் planet x nibiru என அழைக்கப்படும் ஓர் கிரகம் பூமி மீது மோத தயாராக எமது தலைக்கு மேலே சுற்றி வருகின்றது என பல கதைகள் ஆரம்பத்தில் கூறப்பட்டன.
இந்தக் கிரகம் 1995ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இது பூமியை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இது கூடிய விரைவில் பூமியை அழிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவை வெளிப்படுத்தப்பட வில்லை. ஆனாலும் அது பொய்யான செய்தி என்பது மட்டுமே அதிகளவில் பரப்பப்படுகின்றது.
விண்வெளி ஆய்வில் முன்னிலையில் உள்ள நாசாவும் கூட இருண்ட கிரகம் உள்ளது என்றும் அது பூமியில் மோதும் என ஒத்துக் கொண்டுள்ளது.
புளூட்டோ கிரகத்தினை தாண்டி மிகவும் நீள் சுற்றுப்பாதையில் எங்கள் சூரியனையும் சுற்றி வருகிறது, என குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள் இது கோளா அல்லது விண் கல்லா என்பதனை மட்டும் வெளிப்படையாக கூறாமல் planet x nibiru என்றே பெயரிட்டுள்ளனர்.
இப்போது பூமியில் அடுத்தடுத்து இடம்பெறும் புவி அதிர்வுகள் மற்றும் கடல் கொந்தளிப்புகளின், கண்ட நகர்வுகள் மூலம் இந்த கிரகம் பூமியில் மோத வேகமாக பயணித்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் இருக்கத்தான் செய்கின்றது அதாவது இந்த இருண்ட கிரகம் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட கருத்துகளுக்கு அமையவே இது மேலும் வலுப்பெற்றுள்ளது.
குறித்த கிரகம் பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும்போது பூமியின் காந்தப்புலனிலும், ஈர்ப்பு விதிகளிலும் பல மாற்றங்கள் ஏற்படும் அதனால் பல கடற்கொந்தளிப்புகளும் ஏற்படும்.
அதேபோன்று பூமி மீது பல விண்கற்கள் விழும் எனவும் பல எதிர்வு கூறல்கள் கூறப்பட்டது அதே போன்று இப்போது குருகிய காலப்பகுதிக்குள் பல மாற்றங்கள் பூமியில் ஏற்பட்டும் வருகின்றது.
இந்த காரணத்தினால் பூமியின் அழிவு நெடுந்தொலைவில் இல்லை என ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஆனாலும் இப்போதைய மாற்றங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட சூப்பர் மூன் தான் காரணம் என மாற்றுக் கருத்துகள் கூறப்படுகின்றன.
எனினும் சூப்பர் மூன் பாதிப்புகளை விடவும் planet x nibiru தொடர்பிலான பாதிப்புகள் ஏற்கனவே ஆய்வாளர்கள் கூறிவிட்ட காரணத்தினாலேயே இது தொடர்பிலான அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதே போன்று அண்மையில் இந்த இருண்ட கிரகம் பூமியின் சுற்று வட்டத்தில் நுழைந்து விட்டதற்கான ஆதாரம் வெளிவந்தது ஆனாலும் மறைக்கப்பட்டு விட்டது.
இந்தக் கிரகம் பூமியில் மோதுவதற்கு முன்னரே பால்வீதியில் பல மாற்றங்கள் ஏற்படும், அதே போன்று கோள்களின் பாதைகளில் தடுமாற்றம் ஏற்படும் எனவும் கூறப்பட்டது இதுவும் இப்போது நடந்து விட்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒரு தரப்பினர் இது வேற்றுக்கிரகவாசிகளின் கிரகம் எனவும் கூறுகின்றனர். அண்மையில் எமது சூரியனில் இருந்து சக்தியை உறுஞ்சும் மர்மப் பொருள் தொடர்பில் நாசா காணொளி ஒன்றினை வெளியிட்டது.
இதனால் அந்தக் கூற்றும் ஒரு வகையில் மெய்படுகின்றது என்றே கூறவேண்டும். எவ்வாறாயினும் உலக அழிவிற்காக சர்வதேசம் மட்டும் நொடிக்கு நொடி ஆயத்தமாகவே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.