Loading...
பொதுவாக நமது உடலில் தொப்பைக்கு அடுத்தப்படியாக நம்முடைய தொடைப்பகுதியில் தான் அதிகமாக கொழுப்புக்கள் இருக்கும்.
இதற்காக தினமும் நாம் சரியான டயட் மற்றும் ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வர வேண்டும்.
Loading...
எனவே நமது தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, தொடையின் அழகை சிக்கென்று மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தொடையில் இருக்கும் கொழுப்பை கரைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
- நாம் தினமும் சரிவிகிதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இனிப்பு பானங்கள் மற்றும் கலோரிகள் நிறைந்த பானங்கள் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிய அளவிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் சூப், பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட், ஜூஸ் போன்ற உணவுகளை மட்டும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் முறையான டயட் மற்றும் 30 நிமிடம் கார்டியோ உடற்பயிற்சி போன்றவற்றை செய்து வர வேண்டும். இதனால் தொடைகளில் உள்ள தசைகள் நல்ல வடிவமைப்பைப் பெறும்.
- லாஞ்சஸ் என்ற உடற்பயிற்சியானது, தரையில் படுத்துக் கொண்டு, முதலில் ஒரு காலை மேலே தூக்க வேண்டும். பின் அதை இறக்கி, மற்றொரு காலை மேலே தூக்க வேண்டும். இதே போல 10 முறைகள் செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து, இரண்டு கால்களையும் மேலே தூக்கி, இதை 5 முறை செய்ய வேண்டும்.
- தவழும் குழந்தைப் போன்ற நிலையில் இருந்து கொண்டு ஒரு காலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்க வேண்டும். பின் மறுகாலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்க வேண்டும். இதே போல தினமும் செய்து வந்தால், தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து சிக்கென்ற தொடை அழகை பெறலாம்.
Loading...