மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற 14வது போட்டியில் இலங்கை- வங்கதேசம் அணிகள் மோதியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனால் வங்கதேச அணி முதலில் களமிறங்கி விளையாடியது.
நிதானமாக ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக சஞ்ஜிதா இஸ்லாம் 35 ஓட்டங்களை சேர்த்தார். இலங்கை அணி சார்பில், சமரி அத்தப்பத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 94 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவரிலே 3 விக்கெட் இழந்து 97 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
சமரி அத்தப்பத்து 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ஓட்டங்கள் சேர்த்தார். இவருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.