கண்கள் தான் அழகின் முதல் அஸ்திரம். கண்கள் ஒருவரின் வயதை கணித்து சொல்லும் முதல் உறுப்பு. பிறகு தான் சருமம் வெளிப்படுத்தும். கண்களை இளமையாக பாதுகாத்தால் பாதி வயது குறைந்தது போல் இருப்பீர்கள். வெகுநேரம் கணனியை பார்த்துக் கொண்டிருந்தால், நரம்புகள் சோர்ந்து போகும்.
இதனால் அங்கே தளர்வடைய ஆரம்பிக்கும். இரத்த ஓட்டம் குறைந்து, அங்கே நச்சுக்கள் தங்கி, வயதான தோற்றத்தை அளிக்கும். இப்படிதான் சருமம் முதிர்வடைதல் ஆரம்பிக்கிறது. வொயிட் ஐ-லயனர் (White Eye Liner) : கண்ணின் கீழ் பகுதியில் வொயிட் ஐ லயனர் (White Eye Liner) பயன்படுத்துவது மூலம் கண்கள் பளிச்சென தெரிவதுடன் பெரியதாகவும் தெரியும். கருவளையம் : கண்கள் பெரியதாக தெரிய வேண்டுமெனில் கருவளையம் இருக்க கூடாது.
சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால், கண்களில் ஈரப்பதம் குறைந்து கண்களில் கருவளையம் தோன்ற ஆரம்பிக்கும். இதற்கு நல்ல தரமான கன்சீலரை பயன்படுத்தலாம்.
ஹைலைட்டர் : வொயிட் ஹைலைட்டரை புருவத்திற்கு கீழேயும், கண்ணீர் பையின் அருகேயும் பயன்படுத்துவதால் கண்கள் பெரிதாக தெரியும்.
இமைமுடி : மஸ்காரா உபயோகிப்பதால் கண்கள் பெரிதாக தெரிய வாய்ப்புகள் அதிகம். மஸ்காரா பிடிக்காதவர்கள், செயற்கை இமைமுடியை பயன்படுத்தலாம்.
நீர்ப்பை : கண்களுக்கு கீழே உள்ள நீர் பைகளால் கண்கள் சிறிதாக தெரியும். இதனை தடுக்க நன்றாக உறங்க வேண்டும், நீர் பைகள் உள்ள இடத்தில் குளிர் தேநீர்பையை வைக்கவும்.
புருவம் : மெலிதான புருவம் இருந்தால் கண்கள் பெரிதாக தெரியாது. புருவசீரமைப்பை தொடர்ந்து மேற்கொள்வதால் புருவம் அழகாக தெரியும், கண்களும் அழகாகும்.