சிரியாவில் நேற்று தொடங்கி கடந்த 24 மணி நேரமாக நடைபெற்ற சண்டையில் 38 கிளர்ச்சியாளர்கள் மற்றும் 23 அரசுப்படையினர் என மொத்தம் 61 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது.
இந்த போரில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையில், அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பட்டில் வைத்திருந்த இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். இதனால், அரசுப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், மாரெட் அல் நுமன் மற்றும் இட்லிப் பகுதிகளில் நேற்று முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கி கடந்த 24 மணி நேரமாக நடைபெற்ற சண்டையில் 38 கிளர்ச்சியாளர்கள் மற்றும் 23 அரசுப்படையினர் என மொத்தம் 61 பேர் உயிரிழந்தனர்.