அவுஸ்திரேலியாவில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் விபத்து ஒன்றில் பலியாகியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைப்பதற்காகப் பெரும் போராட்டம் இடம்பெறும் நிலையில் தீயணைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் விபத்து ஒன்றில் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த இழப்புக்களுடன் சேர்த்து கடந்த ஒக்டோபர் மாதம் முதல் காட்டுத்தீக்கு பலியான தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கற்பனை செய்யமுடியாத அளவில் தீப்பரம்பலுக்குரிய சூழ்நிலை நீடிப்பதாக நியூ சவுத்வேல்ஸ் பகுதியின் தீயணைப்பு சேவை மையம் குறிப்பிட்டுள்ள நிலையில் தீயணைப்பு வீரர்களின் மறைவுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஸகொட் மொறிசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நாட்டில் தீவிரமான காட்டுத் தீ பரவல் இடம்பெறும் நிலையில் பிரதமர் ஸகொட் மொறிசன் ஹவாய்தீவுக்கு விடுமுறை சென்ற விடயம் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ள நிலையில் அதற்கும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.