இந்தோனேசியாவில் இன்று 16 பொலிசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து மாயாமாகி உள்ளது.
இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள பதாம் தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது, இதில் 16 பொலிசார் பயணம் செய்துள்ளனர்.
மேலும் இவ்விமானம் பதாம் தீவு கடற்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்துள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்தும், விமானம் எங்கு சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மீட்புக்குழுவினர் பதாம் தீவு கடற்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே, மீட்புக்குழுவினர் பதாம் தீவு கடற்பகுதியில் தேடி வருவதாகவும், இதற்கிடையே விமானத்தின் பாகம் ஒன்று கடலில் கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்ததாகவும், அதில் மொபைல் போன்கள், பொலிசாரின் பதிவுகள் மற்றும் பொலிசாரின் உடைகள் கடலில் மிதப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.