Loading...
கரும்பச்சை அல்லது இளம்பச்சை நிறத்தில் இருக்கும் பாகற்காயில், நமது உடலுக்கு தேவையான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு உணவையும் நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
Loading...
அதே போல் பாகற்காய் நமது உடம்பிற்கு எவ்வளவு நன்மைகள் தருகின்றதோ அவ்வளவு தீமைகளையும் நமக்கு தருகிறது.
பாகற்காயை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
- தினமும் சாப்பிட்டு வந்தால், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- கர்ப்பிணி பெண்கள் தினமும் பாகற்காயை அதிகமாக தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாகற்காய் கருப்பையின் செயல்பாட்டை அதிகமாக தூண்டுவதால், குறைப்பிரசவத்தை ஏற்படுத்துகிறது.
- நாம் மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பாகற்காய் நமது உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
- குளுக்கோஸ்-6-பாஸ்பேட் டீஹைட்ராஜினேஸ் பற்றாக்குறை உள்ளவர்கள் பாகற்காயின் விதைகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு ரத்தசோகை, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
- பாகற்காயில் இருக்கும் விதையின் உறைகள் நச்சுக்களை ஏற்படுத்தும். எனவே இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் சில நேரங்களில் மரணம் ஏற்படும் சூழ்நிலைகள் கூட ஏற்படுகிறது.
Loading...