Loading...
தனக்கு 2வது திருமணம் நடந்தது உண்மைதான் எனவும், அதை மறைத்து விட்டதாகவும் தொலைக்காட்சி காமெடி நடிகர் மதுரை முத்து தெரிவித்துள்ளார்.
Loading...
சன் டிவி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி பேச்சாளரும், தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி பலியானார்.
முத்துவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தன்னுடை மனைவியின் நினைவாகவே இருந்த அவர், அடிக்கடி அவரின் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்.
அந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம், தனக்கு 2வது திருமணம் நடந்து விட்டதாக கூறி, புதிய மனைவியுடன் திருமண கோலத்தில் அவர் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால், அந்த காட்சி ஒரு குறும்படத்திற்கு எடுக்கப்பட்ட ஒன்று.. அதில் உண்மையில்லை என்று மதுரை முத்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “வயதான தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நான் அடுத்த திருமணம் பற்றி முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அப்படி திருமணம் செய்த பெண்தான் நீத்தி. அவர் என்னுடைய மனைவியின் நெருங்கிய தோழி.
மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். சிறு வயதில் அவரின் தந்தை குடும்பத்தை விட்டு சென்றதால், தாய் இல்லாத என் குழந்தைகளின் ஏக்கத்தை அவர் புரிந்து கொண்டு என்னை திருமணம் செய்ய சம்மதித்தார்.
அவரை திருமணம் செய்த போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தேன். ஆனால், ஏராளமனோர் என்னை தவறாக எடுத்துக் கொண்டதால் அதை நீக்கி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
Loading...