தற்போது மாணவர்கள் நன்றாக கற்க கூடியவர்களாகவும், புத்தி கூர்மையுடையவர்களாகவும் இருக்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை நினைவாற்றலாகும், படித்த விடயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
இந்த பிரச்சினையை நிவர்த்திக்க எமது உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வரலாம்.
எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.
அத்தகைய உணவுகளை தினமும் சாப்பிடுவது போர் தான். இருப்பினும் அவற்றை சாப்பிட்டால், நிச்சயம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். சரி. இப்போது அத்தகைய ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளைப் பார்ப்போம்.
தண்ணீர்
மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும்.
எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசளிக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பழங்கள்
பழங்கள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.
ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், முலாம் பழம், பேரீச்சம்பழம், அன்னாசி போன்ற உணவுகளை உண்ணலாம்.
மீன்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது.
மேலும் இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.
ஓரிகான் உடல்நல விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வில்லியம் கானர் மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என்கிறார்.
மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை மீனும், மீன் எண்ணெயும், மீன் மாத்திரையும் என்கிறார் அவர்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.
வெள்ளை பூண்டு
வெள்ளை பூண்டு மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. எனவே, ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.
தேன்
தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
விதை பொருட்கள்
நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிட வேண்டும். தானியங்கள்பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.