சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆர்வம் கொண்டுள்ளார்.
கோத்தபாய தனது கோரிக்கையை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தனக்கு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் கீழ் அதிகாரியாக செயற்பட்டதனை விடவும், சமகால ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விருப்பம் உள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதானியால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் கோத்தபாயவின் நிலைப்பாடு குறித்து, மஹிந்த ஆதரவு அணிக்குள் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவதனை தடுப்பதற்காக ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தினை சுதந்திர கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பிளவுபட்டுள்ள கட்சியை மீளிணைக்கும் நடவடிக்கைக்கு சில தரப்பினர் ஆதரவு வெளியிட்ட போதும், மஹிந்த அணிக்கு எதிரானவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுவடைய செய்ய வேண்டுமாயின், கோத்தபாய மற்றும் பீ.பீ.ஜயசுந்தர ஆகிய இருவரையும் ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் மற்றைய தரப்பு உள்ளது.
எப்படியிருப்பினும் இங்கு மஹிந்த ராஜபக்ச அல்லது பசில் ராஜபக்சவை, ஜனாதிபதியுடன் நெருக்கமாக்குவதனை விடவும் சமல் ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த எதிர்ப்பு தரப்பின் விரும்பம் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியுடன் கோத்தபாய இணைத்து கொள்ளப்பட்டால், சமல் ராஜபக்சவுடனும் இணைய வேண்டும் என்பது அந்த தரப்பினரின் கருத்தாக உள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக கோத்தபாய ராஜபக்சவுக்கு அரசாங்க அதிகாரியாக உயர் பதவி ஒன்று வழங்குவதற்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமையவே கோத்தபாய ராஜபக்ச குறித்த தகவலை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார். எப்படியிருப்பினும் ஜனாதிபதி இது தொடர்பில் உரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்சவுடனான கலந்துரையாடலை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த கலந்துரையாடலுக்காக கோத்தபாய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் மீகஹகிவுல, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஓய்வு பெற்ற மேஜர் பாலித பெர்ணான்டோ மற்றும் பிரபல ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.