திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பிரதேசத்தில் இருந்து லங்காபட்டணம் நேக்கி மீன்பிடிதொழிலுக்கு சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லையென சேரு நுவர பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை லங்கா பட்டணம் பிரதேசத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில் படகில் சென்ற நான்கு பேரில் ஒருவறைக்கானவில்லை எனவும் மிகுதி மூன்று நபர்களும் நீந்தி கரை சேர்ந்ததாக அறிய முடிந்துள்ளது.
இவ்வாறு கடலில் காணாமல் போனவர் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசம் ஜாயா வீதியில் வசிக்கும் அப்துல் வஹாப் முகம்மது ஹனீப் (வயது 41) என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன நபரை பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் தாங்கள் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.