அவுஸ்திரேலியாவில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது கொல்லப்பட்ட 17 வயது ஆப்பிரிக்கா சிறுவனுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெல்போர்னின் வடமேற்கில் உள்ள செயின்ட் ஆல்பன்ஸில் உள்ள கெய்லர் ப்ளைன்ஸ் ரயில் நிலையம் அருகே இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 17 வயதான அகுவர் அகெக் லுவல் கொல்லப்பட்டார்.
கடந்த வாரம் கொல்லப்பட்ட தெற்கு சூடானைச் சேர்ந்த சிறுவன் லுவல்-க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
லுவல் உயிர் விட்ட இடமான கெகன் ஸ்ட்ரீட் பகுதியில் நண்பர்கள் மற்றும் தெற்கு சூடான் தலைவர்கள் என சுமார் 100 பேர் கூடி , பூக்கள் மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படும் மெழுகுவர்த்திகளை வைத்து அழுது அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது லுவலின் தாயார் மார்த்தா மயோலாவை அஞ்சலி செலுத்தும் இடத்தில், பூச்செண்டு பூக்களை கீழே போட்டு துயரத்தில் அழுது துடித்தது சுருண்டு விழுந்தது காணபோரை கலங்க வைத்தது.
இந்த மோதலில் 30 இளம் வயதினருக்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டிய பொலிசார், முதற்கட்டமாக 10 பேரை கைது செய்தனர். எனினும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை காலை வரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
அஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொண்ட சமூகத் தலைவர் ரிச்சர்ட் டெங், இளைஞர்களை தங்கள் மூப்பர்கள் கூறுவதை கேட்டு குற்றங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.