Loading...
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் சிறப்பு வார்டில் உள்ள கருணாநிதிக்கு அனைத்து வகையான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
Loading...
அதில், கருணாநிதியின் நலன் தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று அல்லது திங்கள்கிழமை கருணாநிதி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். கருணாநிதி நலம் பெறவும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
Loading...