Loading...
அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையில் அரிசியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை கடைகளில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரணமாக பயன்பாட்டுக்கு உகந்த அரிசி ஒரு கிலோவின் விலை 90 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு கிலோ அரிசியின் விலை 60 ரூபாவாக காணப்பட்டது.
Loading...
அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் சந்தையை கட்டுப்படுத்தி வரும் காரணத்தினால் விலைகள் இவ்வாறு உயர்வடைந்துள்ளன.
பாரிய அளவிலான அரிசி வியாபாரிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அரிசியின் விலையை குறைக்க முடியும் என சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Loading...